பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் தங்கம் நகர் பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டிராக்டர் டிரைவரான சுரேஷ்(29) என்ற மகன் உள்ளார். கடந்த சில வருடங்களாக சுரேஷூம் அணங்காநல்லூர் கிராமத்தை சேர்ந்த நந்தினி(20) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 11-ஆம் தேதி நந்தினி திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து நந்தினியின் பெற்றோர் குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் […]
