மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற திருமண ஜோடிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக வந்த திருமண ஜோடிகள் இருவரும் திடீரென அவர்கள் வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனைப் பார்த்த அருகிலிருந்த காவல்துறையினர் இருவரையும் தடுத்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். அதன்பின் அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வி.கூத்தம்பட்டி பகுதியில் வசிக்கும் ஐ.டி.ஐ. படித்து […]
