பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜான்விகபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஆவார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி கபூர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் நடிகை ஜான்வி கபூர் மராட்டிய முன்னாள் முதல்வர் சுஷில் குமார் ஷிண்டேவின் பேரனும், நடிகருமான ஷிகர் பகாரியாவை காதலிப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் ஒன்றாக சேர்ந்து மாலத்தீவுக்கு சென்றுள்ளனர். […]
