காதலியை கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற வாலிபர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தின் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது. கோழிக்கோடு மாவட்டம் திக்கோடி கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக கிருஷ்ணபிரியா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது இவரை வழிமறித்த வாலிபர் ஒருவர், கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு, அவர் மீதும் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். இவர்கள் இருவரது […]
