‘காதலர் தினம்’ படத்தில் நடித்த நடிகை சோனாலி பிந்த்ரே, 2018ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து குணமடைந்தார். தற்போது 4 ஆண்டுகளுக்கு பிறகு அதே மருத்துவமனைக்கு சென்றுள்ள அவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உருக்கமான கடிதத்தை வெளியிட்டுள்ளார். அதில், ‘இதே இருக்கையில்தான் 4 ஆண்டுகளுக்கு முன் இருந்தேன். அதன் அச்சம் எனக்குள் இருக்கிறது. ஆனாலும் நம்பிக்கையால் குணமடைந்தேன். எல்லோருக்கும் நல்லது நடக்கும்’ என கூறியுள்ளார்.
