காதலருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை நடிகை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ளார். பிரபல நடிகையான ரகுல் ப்ரீத் சிங் தமிழில் தடையறத் தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ, என்ஜிகே, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று என பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் தற்போது சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்திலும் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை தவிர்த்து தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இவர் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பாக்னானியை காதலிப்பதாக அண்மையில் தெரிவித்தார். […]
