காணொலி வாயிலாக நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் 17 மனுதாரர்கள் கலந்து கொண்டு மனு அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்களில் இருந்து மொத்தம் 17 மனுதாரர்கள் காணொலி வாயிலாக கலந்துகொண்டு ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி பொதுமக்களுக்கு தேவையான கல்வி […]
