தமிழர்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான பொங்கல் திருநாள் கொண்டாட்டங்களில் நான்காவது மற்றும் கடைசி நாள் தான் காணும் பொங்கல். இந்தத் திருநாளானது திருமணமாகாத கன்னி பெண்களுக்கும், ஆண்களுக்குமான ஒரு நாளாகும். எனவே இது கன்னிப் பொங்கல்,காணும் பண்டிகை என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த நாளின் மாலை நேரத்தின் போது திருமணமாகாத பெண்கள் அனைவரும் ஒரு வெள்ளைத் துணியால் மூடப்பட்ட தாம்பூலங்களை கையில் எடுத்துக் கொண்டு ஓர் இடத்தில் கூடுவார்கள். அந்த தாம்பூலத்தில் கரும்புத் துண்டு, கற்கண்டு, பூ, பச்சரிசி, […]
