கேரளாவில் இரண்டு வருடங்களுக்கு முன்பு மாயமான நபரை பெற்ற தாய் மற்றும் சகோதரர் ஆகிய இருவரும் சேர்ந்து கொலை செய்து வீட்டில் புதைத்த சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது. கேரளா கொல்லம் மாவட்டத்தில் உள்ள எரூர் கிராமத்தில் ஷாஜி பீட்டர் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மாயமானதாக அவருடைய குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். மேலும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் அவர் மாயமானதாக எல்லோரும் நம்பினர். இந்நிலையில் அவரது உறவினர் ஒருவர் […]
