கடந்த சனிக்கிழமை பிரித்தானியா நாட்டின் வின்ட்ஸருக்கு அருகிலுள்ள (liquid leisure) நீர் பூங்காவில் காணாமல்போன 11 வயது சிறுமி நீரில் மூழ்கி இறந்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு மாலை 4 மணிக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சுமார் 1 மணிநேரம் கழித்து சிறுமி கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து சிறுமி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். எனினும் சிறுமி உயிர் பிழைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் இறப்பு தொடர்பாக சரியான காரணம் இதுவரையிலும் தெளிவாக தெரியாத நிலையில், அதுகுறித்த […]
