காணாமல் போன போலீஸ்காரர் சடலமாக கிடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்ரவாண்டி அருகில் ஏழாம் கிராமம் பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மயிலம் பகுதியிலிருக்கும் காவல்துறையில் ஏட்டாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் வேல்முருகன் தேர்தல் பணிக்காக கடந்த 18 ஆம் தேதி விக்ரவாண்டி பகுதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். ஆனால் வேல்முருகன் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது மனைவி தமிழரசி அவரை பல இடங்களில் தேடியுள்ளார். ஆனால் […]
