திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் காட்டெருமைகள் நகருக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் நேற்று முன்தினம் வாரச்சந்தை நடைபெற்றதால் பொதுமக்கள் நகரின் முக்கிய பகுதிகளில் நடமாடினர். இந்நிலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை மற்றும் கொடைக்கானல் 7 ரோடு சந்திப்பு ஆகிய பகுதிகளில் நண்பகல் 11 மணி அளவில் பத்துக்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கூட்டமாக வலம் வந்தனர். அதனைக் கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதனால் பீதியடைந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை […]
