கிராமத்திற்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை அமராவதி வனப்பகுதியில் மான்கள், யானைகள், கரடிகள் என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் அங்குள்ள வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி அடர்ந்த வனப்பகுதியை விட்டு மலையடிவாரம் கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன. இந்நிலையில் சின்னகுமாரபாளையம் உள்ளிட்ட மலையடிவார கிராமங்களுக்குள் யானைகள் கூட்டமாக புகுந்துள்ளன. அந்த யானைகள் அங்கிருந்த தென்னை மரத்தில் உள்ள குருத்துகளை தின்றன. இதனை தொடர்ந்து யானைகள் சப்போட்டா […]
