கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சென்ற வருடம் மார்ச்மாதம் இறுதியில் வறட்சி துவங்கியது. இதன் காரணமாக வால்பாறை வனப் பகுதியிலிருந்த காட்டு யானைகள் கூட்டம் கேரள வனப்பகுதிக்கு சென்றுவிட்டது. இப்போது தென் மேற்கு பருவமழை பெய்து வால்பாறை பகுதி முழுதும் பசுமையாக காட்சியளிக்கிறது. இதையடுத்து கேரள வனப் பகுதிகளிலிருந்து காட்டு யானைகள் மீண்டுமாக வால்பாறை வனப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வர தொடங்கி இருக்கிறது. தமிழக, கேரள எல்லையிலுள்ள வால்பாறை வனப் பகுதி, சாலக்குடி வனப் பகுதியில் காட்டு […]
