கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே சிறுமியை கடத்திச் சென்றதாக இளைஞர் ஒருவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். வாலிபர் கைது செய்யப்பட்டது எப்படி ? கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பூவிழுந்த நல்லூர் கரைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் கார்த்திகேயன் அந்த சிறுமியை காதலிப்பதாக கூறி உள்ளார். பதின் பருவத்தில் இருந்த சிறுமியும் கார்த்திகேயன் விரித்த காதல் வலையில் விழுந்துள்ளார். […]
