அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ ஏற்பட்டதால் பதட்டம் அடைந்து மக்கள் வெளியேறினர். அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பெரும் பாதிப்பை சந்தித்த மாகாணங்களில் கலிபோனியாவும் ஒன்று. இந்நிலையில் தற்போது கடுமையான காட்டுத்தீயை கலிபோர்னியா மாகாணம் எதிர்கொண்டு வருகிறது. இது குறித்து சர்வதேச ஊடகங்கள் கூறுகையில் “மின்னல் தாக்குதல்களால் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள வனப்பகுதிகளில் பயங்கரமான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. கடந்த 72 மணி நேரத்தில் 1100 மின்னல் தாக்குதல்கள் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலால் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் […]
