ஊட்டியில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் காட்டுத்தீயை அணைப்பது குறித்து இளைஞர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் வளம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் அதன்கீழ் செயல்படும் சுற்றுச்சூழல் கல்வி மையம் சார்பில் வனத்தீ மேலாண்மை நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதல் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. முதல் 1½ மாத பயிற்சியில் பல்லுயிர்ப் பெருக்கம், காடுகளின் தன்மை, பல்வேறு நாடுகளில் ஏற்படும் காட்டுத் தீயின் தன்மை, இந்தியாவில் காட்டுத் தீயின் தன்மை, அதனை […]
