அல்ஜீரியா நாட்டில் காட்டுத்தீயை உண்டாக்கியதாக ஒரு நபரை மக்கள் அடித்து கொன்றதால் 49 நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அல்ஜீரியா நாட்டில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் காட்டுத்தீ பற்றி எரிந்து தீவிரமாக பரவியது. இதில் 90 நபர்கள் உயிரிழந்தனர். அப்போது, 38 வயதுடைய ஜமீல் பின் இஸ்மாயில் என்ற இளைஞர் தான் காட்டுத்தீயை ஏற்படுத்தியிருக்கிறார் என்று கிராம மக்களுக்கு சந்தேகம் உண்டானது. இதனால் இஸ்மாயில் காவல்துறையினரிடம் உதவி கேட்டிருக்கிறார். உடனே சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் […]
