காட்டுப்பன்றிகளை கொல்ல நாட்டு வெடிகுண்டுகளை வாங்கியவரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் கடம்பூர் கரளையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கையில் பையுடன் சந்தேகப்படும்படி ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். இதனால் காவல்துறையினர் அந்த நபர் வைத்திருந்த பையை வாங்கி சோதனை மேற்கொண்டபோது அதில் 11 நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் கடம்பூர் ஏலஞ்சி புதுக்காட்டு தோட்டம் […]
