வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே இளைஞர் ஒருவர் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து சுமார் 25 ஏக்கர் நிலத்தை மீட்டு தனி ஒரு மனிதனாக போராடி வனப்புமிக்க காட்டை உருவாக்கி சாதித்துள்ளார். குடியாத்தம் அருகே பாலாற்றங்கரையோரத்தில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு சிறிய காட்டில், முயல்களும், மான்களும், காட்டுப் பன்றிகளும் சுற்றித் திரிந்த ஒரு காலம் இருந்தது. பின்னாளில் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கிய அந்த வனம் படிப்படியாக அழிக்கப்பட்டு சுடுகாடுபோல் மாறியது. அதைக் காணப் பொறுக்காமல் களத்தில் இறங்கினார் பட்டதாரி இளைஞர் […]
