மதுரையில் நில உரிமை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் பகுதியில் ஒரே இடத்திற்கு ராஜா மற்றும் முருகன் ஆகிய இருவர் உரிமை கொண்டாடி உள்ளனர். இதனால் நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக அவர்களுக்குள் மோதல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரு தரப்புக்கு இடையே மோதல் உருவாகி ராஜா குடும்பத்தாரை முருகன் தரப்பு கத்தியால் குத்தி உள்ளனர். இதனால் […]
