கொரோனா தடைகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து சீல் வைத்தனர். கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அதிகமாக கூடும் 3000 சதுர அடி கொண்ட கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காமராஜர் சாலை மற்றும் காந்தி சாலை போன்ற பகுதிகளில் செயல்பட்டு வரும் பல்பொருள் அங்காடிகள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் ஜவுளி கடைகள் என 50க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன. […]
