சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகளின் கழிவுகள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்த 80-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கு ஏற்பட்ட புயலால் பாதிக்கப்பட்டு சேதமடைந்தன. இந்நிலையில் உரிமையாளர்கள் அந்த விசைப்படகுகளை கடலிலிருந்து வெளியே எடுத்து உதிரி பாகங்களை அகற்றினர். அதன்பின் காசிமேடு பழைய யார்டு பகுதியில் கழிவுகளை கொட்டி வைத்துள்ளனர். இந்நிலையில் விசைப்படகுகளின் கழிவுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனையடுத்து தீ காற்றின் […]
