தெருநாய்களிடம் இருந்து மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்க நபர் ஒருவர் துப்பாக்கியுடன் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நபர் ஒருவர் துப்பாக்கியை ஏந்தியபடி, மாணவிகளை மதரஸாவிற்கு அழைத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. காசர்கோடு பேக்கலில் உள்ள ஹதாத் நகரில் இருந்து வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள மதரஸா பள்ளியில் படிக்கும் சிறுமியின் தந்தையான சமீர், சில நாட்களுக்கு முன்பு ஒரு குழந்தையை தெருநாய் கடித்ததை அடுத்து இவ்வாறு பாதுகாப்பு வழங்க முடிவு செய்தார். வெள்ளிக்கிழமை, அவர் […]