Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா தாக்கம் : சட்டப்பேரவை தொடர் நாளையுடன் நிறைவு …!!

இன்று காலை சட்ட பேரவை தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்த நிலையில் ஒருவர் குணமடைந்து கண்காணிப்பில் உள்ளார். இதனிடையே ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 31ஆம் தேதியோடு முடிக்கப்படும் என்று கடந்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை  முழுவதுமாக ஒத்திவைக்க வேண்டுமென்று திமுக, […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : சட்டப்பேரவை கூட்டத்தொடர் – திமுக, காங்., புறக்கணிப்பு ….!!

சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிக்க போவதாக திமுக , காங். அறிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கையை மேற்கொண்டு வருகின்றது. இந்திய நாடு முழுவதும் 390 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏழு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. மார்ச் 31 வரை பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு தடுப்பு நடவடிக்கைகளையாக அரசு […]

Categories
தேசிய செய்திகள்

அதிக குழந்தைகள் வேணாம் … சலுகைகள் ரத்து ..! மக்களுக்கு எச்சரிக்கை.!!

இந்தியாவின்  மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் புதிய மசோதாவை காங்கிரஸ் மூத்தத் தலைவர்  அபிஷேக் மனு சிங்வி மாநிலங்களவையில் தாக்கல்செய்யவுள்ளார். மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதா, 2020  என்ற பெயரில் தாக்கல்செய்யப்படவுள்ள , இந்த மசோதாவை  மாநிலங்களவையில் அறிமுகப்படுத்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார். மேலும், வறுமைக் கோட்டிற்குகீழ் வாழும் தம்பதி இரண்டு அல்லது ஒரு குழந்தை மட்டுமே வைத்திருந்தால் அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அளவிற்கு ஊக்கத்தொகை அளிக்கலாம் எனவும் இந்த மசோதாவில் யோசனை […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் முன்பு போல இல்லை; இளம் தலைவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் – ஜோதிராதித்யா!

மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக கமல்நாத் பொறுப்பேற்றார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்ததில் அக்கட்சியின் இளம் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு முக்கியப் பங்கு இருந்தது. எனினும் அவருக்கு முதல்வர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்தார். இதனால் கடும் அதிருப்தியில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா மாநிலங்களவை தேர்தல் வருவதையொட்டி நேற்று காங்கிரஸிலிருந்து விலகி பிரதமர் நரேந்திர மோடியை […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி கலவரம் குறித்து எதிர்க்கட்சிகள் அமளி – நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு!

டெல்லி கலவரம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2வது கூட்டம் 19 நாள் இடைவெளிக்கு பின்னர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கி கடந்த மாதம் 11ம் தேதி முடிவடைந்தது. நாடாளுமன்றத்தின் குளிர்க்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) பட்ஜெட் தொடரின் முதல்கட்ட கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடியுடன் சந்திப்பு…. ”யு டர்ன் அடித்த சிவசேனா”…. கூட்டணிக்குள் உரசல் …!!

மஹாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா , காங்கிரஸ் கூட்டணிக்குள் உரசல் முற்றியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த CAA , NPR , NRC ஆகிய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமிய மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக அவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் ஆதரவு குரல் எழுப்பி வருகின்ற நிலையில் , பல்வேறு மாநிலங்களில் இந்த சட்டமசோதாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்ட்டுள்ளது. சிவசேனா தலைமையிலான காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் கூட்டணிஆட்சி நடந்து வரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஆட்சி செய்ய தெரில…”எதிரியாக பார்த்தார்”…. குமாரசாமியை சாடிய காங்கிரஸ்…!!

குமாரசாமி ஆட்சி செய்ய தெரியாதவர் என்று சித்தராமையா கடுமையாக விமர்சித்துள்ளார். கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபித்ததில் தோல்வியை தழுவியதை அடுத்து முதல்வராக எடியூரப்பா கடந்த மாதம் 26ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். கர்நாடகாவின் முந்தைய அரசு கவிழ்த்து குறித்து காங்கிரஸ் கட்சியினர் மீது குமாரசாமி கடும் விமர்சனத்தை தொடர்ந்து முன்வைத்து வருகின்றார். இந்நிலையில் கர்நாடக மாநில முன்னாள் முதலவர் குமாரசாமி_யின் தந்தையும் ,   முன்னாள் பிரதமருமான தேவேகவுடா_வும் சித்தராமையா_வை கடுமையாக விமர்சித்து வருகின்றார்.அதில், குமாரசாமி முதல்வராக  […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”காங்கிரஸ் அடிமையாக நடத்தியது” நொந்து போன குமாரசாமி…..!!

என்னை காங்கிரஸ் கட்சி அடிமை போல நடத்தியது  என்று குமாரசாமி வேதனையடைந்துள்ளார். கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபித்ததில் தோல்வியை தழுவியதை அடுத்து முதல்வராக எடியூரப்பா கடந்த மாதம் 26ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். கர்நாடகாவின் முந்தைய அரசு கவிழ்த்து குறித்து காங்கிரஸ் கட்சியினர் மீது குமாரசாமி கடும் விமர்சனத்தை தொடர்ந்து முன்வைத்து வருகின்றார்.இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் , நான் கர்நாடகாவில் 14 மாதம் முதல்வராக இருந்தேன். அப்போதேல்லாம் காங்கிரஸ் கட்சியால் அவமானப்படுத்தப்பட்டேன். என்னை கிளார்க் போல் […]

Categories

Tech |