சென்னையில் இடைவிடாது பெய்து வரும் கனமழை கவலை அளிப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி ட்விட்டர் பதிவிட்டுள்ளார். வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொடர் கனமழை நீடித்து வருகிறது சென்னையின் பல்வேறு பகுதியில் குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது. இதுபற்றி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இடைவிடாது பெய்யும் கனமழை கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கவலை தெரிவித்தார். மழை வெள்ளத்தால் […]
