காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடவில்லை என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிடவில்லை என்று அறிவித்தவுடன் சசி தரூரும், அசோக் கெலாட்டும் போட்டியில் இருந்தார்கள். அதில், அசோக்கெலாட் காங்கிரஸ் தலைவராக வரும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்த சூழ்நிலையில் தற்போது தான் போட்டியிடவில்லை என்று அசோக் கெலாட் அறிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராஜஸ்தான் மாநில […]
