குற்றப் பின்னணி உடையவர்கள் தாங்களை காப்பாற்றி கொள்ள பாஜகவில் சேர்கின்றனர் என அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் கூறியுள்ளார். வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத் தலைமையில் கையெழுத்து பிரசார பயணம் நடைபெற்றது. இதில் மத்திய அரசை கண்டித்தும், புதிய வேளாண் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும் பொதுமக்களிடமும், விவசாயிகளிடமும் கையெழுத்து பெற்றார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது , ”விவசாயிகளின் நலனில் பொறுப்பு […]
