நாமக்கல் மாவட்டத்தில் காகித ஆலையில் பணிபுரியும் போது கொதிகலனியினுள் தவறி விழுந்து ஊழியர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கதிரேசன். இவர் நாமக்கல் மாவட்டத்திலுள்ள தனியார் காகித ஆலையில் 6 வருடங்களாக பணியாற்றி வந்துள்ளார். இவர் குடும்பத்துடன் அங்குள்ள குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பணிக்கு சென்ற கதிரேசன் கொதிகலன் மேல் உள்ள தடுப்பில் நின்று வேலை செய்து கொண்டிருந்ததார். அப்போது திடீரென தடுப்பு உடைந்ததில் கதிரேசன் கொதிகலனியினுள் தவறி […]
