தமிழகம் முழுவதும் பள்ளி கல்வி ஆசிரியர்களுக்கான ஆன்லைன் வழி இடமாறுதல் கவுன்சிலிங் அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி பணியாளர் பிரிவு இணை இயக்குனர் நரேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஆசிரியர் பயிற்றுனரில் இருந்து பட்டதாரி ஆசிரியராக பணிமாற்றம் வேண்டும் என்று வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆசிரியர்கள் பலர் நீதிமன்ற தீர்ப்பானை பெற்றுள்ளனர். இந்த ஆசிரியர்கள் மட்டும் இடமாறுதலில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை இன்று மாலை 5 மணி வரை பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்கப்படுகிறது. […]
