சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தேவகோட்டை அருகே நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமியின் மகனான கருமாணிக்கம் திருவாடானை சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 3-வது வார்டு கவுன்சிலராக கண்ணங்குடி யூனியனில் இருந்தார். இந்நிலையில் வருகின்ற […]
