கவுந்தப்பாடி அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த தந்தை மற்றும் மகள் மீது டேங்கர் லாரி மோதியதால் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கவுந்தப்பாடி அருகே உள்ள கண்ணாடி புதூர் என்ற பகுதியில் குமாரசாமி என்பவர் வசித்துவருகிறார். கூலித் தொழிலாளியான அவருக்கு 24 வயதில் பிரியா என்ற மகள் இருக்கிறார். அவர்கள் 2 பேரும் நேற்று கவுந்தபாடி கடை வீதியில் நடந்து சென்றுள்ளனர். அப்போது அவர்களின் பின்னால் வந்து கொண்டிருந்த டேங்கர் லாரி ஒன்று திடீரென […]
