சென்னையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து கன்டெய்னர் லாரியை ராஜா என்பவர் கார் உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு வண்டலூர்-மீச்சூர் போக்குவரத்து சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது கன்டெய்னர் லாரி மலையம்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் உள்ள மின் கம்பம் ஒன்றின் மீது வேகமாக மோதியது. இதனால் அந்த மின் கம்பம் உடைந்து கீழே விழுந்ததோடு, […]
