பிரபல திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் (65) சென்னையில் இன்று காலமானார். தமிழில் இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1400 பாடல்களை பிறைசூடன் எழுதியுள்ளார். நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான், சோலப் பசுங்கிளியே, மீனம்மா மீனம்மா, ஆட்டமா தேரோட்டமா, நடந்தால் இரண்டடி உள்ளிட்ட பல புகழ் பெற்ற பாடல்களை எழுதியவர் இவர். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறைசூடன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், காலத்தால் அழியாத […]
