டெல்லி லோதி எஸ்டேட்டிலுள்ள தமிழ் கல்விக் கழகம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். சுமார் 51/2 அடி உயரம் மற்றும் ஆயிரத்து 500 கிலோ எடை உடைய இந்த திருவள்ளுவர் சிலை வி.ஜி.பி.உலக தமிழ் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம் அவர்களால் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, திருக்குறள் என்பது பக்தி,வாழ்வியல், பிரபஞ்சம் என அனைத்தையும் உள்ளடக்கியது ஆகும். ஜி.யோ.போப்பின் மொழி […]
