நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. கீர்த்தி சுரேஷ் விஜய், விக்ரம், தனுஷ், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழில் டாப்நாயகியாக வலம் வருகிறார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார். […]
