விமானத்தின் மூலம் அரிய வகை கழுகு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஒக்கி புயல் ஏற்பட்டது. இந்த புயல் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. அப்போது ஆசாரிப்பள்ளம் பகுதியில் அரிய வகை சினேரியஸ் கழுகு இருந்தது. இதனை வனத்துறையினர் மீட்டு உதயகிரி உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தனர். அங்கு அந்த கழுகிற்கு ஒக்கி என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த வகை கழுகு காட்டில் கூட்டமாக வாழும் தன்மையுடையது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள கெரு […]
