ரயில்வே நுழைவு பாலத்தின் அருகில் உள்ள பகுதிகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் பாதசாரிகள் அவதிக்குள்ளாகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள வெண்டிபாளையம் சாலையில் ரயில்வே நுழைவு பாலம் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த பாலத்தை ஒட்டி உள்ள பகுதிகளில் கழிவுநீர் தேங்கி இருப்பதால் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பல முறை புகார் அளித்தும் மாநகராட்சி சார்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த ரயில்வே நுழைவு பாலத்தின் வழியாக ஈரோடு […]
