Categories
உலகசெய்திகள்

“கழிவு நீர் மாதிரிகளில் போலியோ வைரஸ் கண்டுபிடிப்பு”… 10 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ பூஸ்டர் தடுப்பூசி செலுத்த முடிவு…!!!!!!!

வடக்கு மற்றும் கிழக்கு லண்டனில் உள்ள கழிவு நீரில் தடுப்பூசிகளில் இருந்து பெறப்பட்ட போலியோ வைரஸ் வகை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து ஒன்று முதல் 9 வரையிலான குழந்தைகளுக்கு இலக்கு பூஸ்டர் போலியோ பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இதனால் லண்டனில் சுமார் 10 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட இருக்கிறது. லண்டனில் கழிவு நீரில் போலியோ வைரஸ் போன்ற 116 மாதிரிகள் கண்டறியப்பட்டதாக இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“வீடுகளுக்குள் புகுந்த கழிவு நீர்”…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்… போலீசார் தீவிர விசாரணை….!!!!!!!!

பேரூர் அருகே செம்மேடு திருவிக வீதியில் சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றது. இந்த பகுதி தாழ்வான பகுதியில் இருப்பதால் மழைக்காலங்களில் மழைநீர் மற்றும் சாக்கடை நீர் வீடுகளுக்கு முன் தேங்கி நிற்கின்றது. தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக திருவிக வீதியில் மழைநீர் மற்றும் சாக்கடை கழிவு நீர்  வீடுகளுக்குள் புகுந்து விட்டது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டிருக்கிறது. மேலும் இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டுமென அந்த பகுதி மக்கள் சுமார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கழிவுகளால் நுரையாய் பொங்கிய திருமணி முத்தாறு….அதிர்ச்சியில் மக்கள்….!!!!

சேலம் மாவட்ட திருமணிமுத்தாறில் அடிக்கடி சாயப்பட்டறை கழிவுநீர் கலந்து செல்கிறது. இதனை தடுப்பதற்காக விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இதுவே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி சேலத்தில் கன மழை பெய்தது. இதனை பயன்படுத்தி ஒரு சில சாயப்பட்டறையில் இருந்து சாயக் கழிவுகள் திருமணிமுத்தாறில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் உத்தமசோழபுரம் அருகே திருமணிமுத்தாறில் சாயக்கழிவு நீருடன் கலந்து நுங்கும், நுரையுமாக காணப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் கூறியது, மழைக்காலங்களில் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. கழிவு நீரிலிருந்து தயாரிக்கப்படும் “ஜில் பீர்”… வரவேற்கும் மது பிரியர்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

கழிவு நீரை மறுசுழற்சி செய்து, அதிலிருந்து கிடைக்கும்  நீரிலிருந்து தயாரிக்கப்படும்   ஜில்பீருக்கு மதுபிரியர்களிடையே அதிக  வரவேற்பு கிடைத்துள்ளது. சிங்கப்பூர் நாட்டில் கழிவுநீரிலிருந்து மறுசுழற்சி செய்யப்படும் நீரை பயன்படுத்தி பீர் தயாரிக்கப்பட்டு, “நியூப்ரூ” என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த கழிவு நீர் முதலில் சிங்கப்பூர் குடிநீர் விநியோக சுத்திகரிப்பு ஆலையிலிருந்து பம்ப் செய்யப்பட்டு அதன் மூலமாக வடிகட்டப்பட்ட சுத்தமான நீராகும். இவ்வாறு மறுசுழற்சி செய்யப்படும் குடிநீரின் பிராண்டின் பெயர்தான் நியூவாட்டர்  எனப்படுகிறது. இந்த குடிநீரை பீர் தயாரிக்க பயன்படுத்துகின்றனர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சொல்லி, சொல்லி கேட்கல…! உடனே நடவடிக்கை எடுங்க…. குளத்துக்காக ஈரோடு மக்கள் போராட்டம் ..!!

புஞ்சைபுளியம்பட்டி குளத்தில் சாயக்கழிவு நீர் கலப்பதை கண்டித்து பொதுமக்கள்  போரட்டத்தில் ஈடுபட்டதால்  மூன்று மணி நேரத்திற்கும் மேலாக வாகனப் போக்குவரத்து ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம்  புஞ்சைபுளியம்பட்டி  அருகேயுள்ள நல்லூர் ஊராட்சிக்கு  உட்பட்ட 75  ஏக்கர் பரப்பளவில் உள்ள குளத்தில்  ஓடை  வழியாக சாயக்கழிவு நீர்கள் கலக்கின்றன.  இதனை அருந்தும்  கால்நடைகள் நோய் வாய்க்கு உட்பட்டுள்ளன. இந்நிலையில் சாயக்கழிவு நீர் தொடர்பாக அதிகாரிகளிடம் தெரிவித்தும் அவர்கள் எந்த பதிலும் அளிக்காததால் பொதுமக்கள் சத்தியமங்கலம் – கோவை நெடுஞ்சாலையில் நேற்றுமுன்தினம் […]

Categories
அரசியல்

ஆற்றுநீர் தூய்மை திட்டத்தை செயல்படுத்துங்க…. அன்புமணி வைத்த கோரிக்கை…!!

காவிரி ஆற்றை குறித்து ஐஐடி நடத்திய ஆய்வில் மருத்துவ மாசுப் பொருட்களும், உலோக மாசுக்களும் அதிகளவு கலந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால்  அன்புமணி ராமதாஸ் ஆற்றுநீர் தூய்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது, “அதிக அளவிலான மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் காவிரிக் கரையோரமாக உள்ளன. மேலும் சாயப் பட்டறைகள், துணி நிறுவனங்கள், வேதிப்பொருள் ஆலைகள், சர்க்கரை ஆலைகள் என ஏராளமான தொழிற்சாலைகள் அந்த இடத்தில் செயல்பட்டு வருகின்றன. இதனால் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நிலங்களுக்குள் புகுந்த கழிவுநீர்… விவசாயிகள் அவதி… அதிகாரிகள் நேரடி ஆய்வு…!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான விவசாய நிலங்களையொட்டி சாக்கடை கால்வைகள் செல்கின்றது. இந்நிலையில் கொல்லப்பட்டி கிராமத்தில் உள்ள சாக்கடை கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நேரடியாக விவசாய நிலங்களுக்குள் செல்கிறது. இதனால் அப்பகுதியில் ஏற்கனவே பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் பயிர் சாகுபடியும் பாதிப்படையும் அபாயம் உள்ளது. இதனையடுத்து அப்பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடமும், வேளாண்மை அதிகாரிகளிடமும் புகார் மனு அளித்துள்ளனர்  மேலும் ஆட்சியரின் உத்தரவின்படி […]

Categories

Tech |