மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள ஒரு தனியார் வீட்டு வசதி சங்கத்தின் கழிவு நீர் அறையை சுத்தம் செய்யும் பணியில் இன்று காலை 3 துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் 18 அடி ஆழமுள்ள வடிகால் மற்றும் செப்டிக் டேங்க் தொட்டியில் இறங்கி வேலை செய்து வந்தனர். அந்த தொழிலாளர்கள் வேலை செய்யும் போது இருவர் உயிரிழந்தனர், ஒருவர் காணாமல் போனார். இதனையடுத்து வீட்டு வசதி சங்கத்தில் வசிப்பவர்கள் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். […]
