Categories
மாநில செய்திகள்

ராமேஸ்வரத்தில் புனித நீரில் நீராட செல்கிறார்களா…? இல்லனா கழிவு நீரில் நீராட செல்கிறார்களா….? கோர்ட் சரமாரி கேள்வி…..!!!!

ராமநாதபுரத்தைச் சேர்ந்த மார்க்கண்டன் என்பவர் மதுரை ஹைகோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில் ராமேஸ்வரத்தில் பழமையான ராமநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தங்கள் புனித நீராக கருதப்படுகிறது. இந்த பகுதியில் 64 தீர்த்தங்கள் இருக்கிறது. இதில் அக்னி தீர்த்தம் பகுதியில் நீராடுவதற்காக இந்தியா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இப்படிப்பட்ட புனித இடத்தில் ராமேஸ்வரம் மாவட்டத்தில் உள்ள கழிவு நீர் நேரடியாக கலப்பதோடு, சாக்கடைகள் மற்றும் குப்பைகள் போன்றவைகளும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொடர் மழை!…. ஓடைகளில் பெருக்கெடுத்த மழைநீர்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….!!!!

ஈரோடு மாவட்டத்தில் சென்ற சில தினங்களாக தொடர்ந்து மழைபெய்து வருகிறது. நேற்று முன் தினம் இரவு துவங்கிய மழை அதிகாலை வரை விடாமல் பெய்துகொண்டிருந்தது. ஈரோட்டில் நேற்று காலை நிலவரப்படி 38 மி.மீ மழை பெய்ததாக பதிவாகியிருந்தது. தொடர்ந்து மழைபெய்து வருவதால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. இதனால் பள்ளமான இடங்களில் வெள்ளம் குட்டை போல தேங்கி காணப்பட்டது. ஈரோட்டின் முக்கியமான ஓடைகளாக உள்ள பெரும் பள்ளம், பிச்சைக்காரன் பள்ளம், சுண்ணாம்பு ஓடை, கொல்லம்பாளையம் ஓடை […]

Categories
உலக செய்திகள்

கழிவுநீரை கடலில் கொட்டும் பிரிட்டன்…. ஐரோப்பிய ஒன்றியத்திடம் புகார் அளித்த பிரான்ஸ்…!!!

பிரான்ஸ் அரசு, இரண்டு நாடுகளுக்குமான பகிர்ந்து கொள்ளப்பட்ட தண்ணீரில் கழிவு நீரை சேர்ப்பதாக பிரிட்டன் மீது புகார் தெரிவித்திருக்கிறது. பிரிட்டன் பகிரப்பட்ட கடல் நீரில் கழிவு நீரை கொட்டுவது பிரெக்ஸிட்டிற்குப் பின் ஐரோப்பிய நாடுகளுக்கு எரிச்சலை தந்தது. இதனால் சுற்றுச்சூழலின் தரம் வெகுவாக குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பிரான்ஸ் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை எதிர்த்து நடவடிக்கை மேற்கொள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வலியுறுத்தியிருக்கிறார்கள். அதன்படி நேற்று 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐரோப்பிய ஒன்றிய சுற்றுச்சூழல் ஆணையரான […]

Categories
உலக செய்திகள்

பரிதாப நிலையில் மரியுபோல் நகர்…. விதிகளில் கிடக்கும் சடலங்கள்…. கழிவுநீரை குடிக்கும் மக்கள்…!!!

உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகர், கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவிற்கு புகழ் வாய்ந்ததாக இருந்த நிலையில் தற்போது அங்கு மீதமிருக்கும் மக்களின் நிலை பரிதாபமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் தலைநகரை ஆக்கிரமிக்க ரஷ்ய படையினர் கடுமையாக முயன்றனர். ஆனால் அது நடக்காததால் மரியுபோல என்னும் துறைமுக நகரத்தை அழிக்க தொடங்கினர். ரஷ்யாவின் கொடூரத் தாக்குதல் காரணமாக, அந்தநகரில் இருக்கும் வீடுகள் மண் மேடாகியது.  ரஷ்ய படையினர் அந்நகரத்தை விட்டு வெளியேறி விட்டனர். எனினும், அங்கிருந்து சடலங்கள் மீட்கப்படவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே உஷார்!… கழிவுநீர் வடிகாலுடன் இதை இணைக்ககூடாது…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இருப்பதாவது “சென்னை மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், கட்டிட கழிவுகளை அகற்றுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மண்டலத்திலும் மண்டல பறக்கும் படைக் குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த குழுவினரால் இதுவரையிலும் 15 மண்டலங்களில் 528 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. அதேபோன்று 406 மெட்ரிக்டன் கட்டிடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மழைநீர் வடிகால்களில் இணைக்கப்பட்டிருந்த 94 கழிவு நீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டிருப்பவர்கள் தாமாகவே முன் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நாங்க எங்கதான் போறது? வீட்டிற்குள் புகுந்த கழிவு நீர்… புலம்ப வைத்த பூந்தமல்லி …!!

பூந்தமல்லி நகராட்சியில் குட்டை முழுவதும் நிரம்பி கழிவு நீர் அதிக அளவில் வெளியேறி குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு பக்கத்து வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட 10-வது வார்டு எம்ஜிஆர் நகர் குட்டையை ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டி உள்ளதால் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அங்கு இருக்கும் மழைநீரை நகராட்சி அதிகாரிகள் பெரிய அளவிலான மோட்டார்களை வைத்து தேங்கியுள்ள மழை நீரை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நிரம்பி வழிந்த கழிவுநீர்…. சிரமப்படும் பொதுமக்கள்…. விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

பாதாள சாக்கடை குழாயை சீரமைக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் கர்ண கொல்லை அருகில் தெற்கு, வடக்கு, மேற்கு போன்ற தெருக்களில் கழிவுநீர் தொட்டி நிரம்பி வீட்டிற்குள் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடை குழாயை சீரமைக்கவும், கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும் இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதை தூர்வார வேண்டும்…. குடிநீருடன் கலக்கும் கழிவுநீர்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

சாக்கடை கால்வாய் தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநகரில் உள்ள குப்பைகளை பணியாளர்கள் அகற்றிவருகின்றனர். இதேபோன்று மாநகரில் சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணியும் நடைபெற்று வருகிறது. ஆனால் திருப்பூர் பி.என்.ரோடு மேட்டுப்பாளையம், ராமநாதபுரம் 2-வது வீதி உள்ளிட்ட இடங்களில் சாக்கடை கால்வாய் தூர்வாராமல் இருப்பதால் கழிவுநீர் சாலையில் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சாக்கடை கால்வாய் அருகில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர்…. அவதிப்பட்ட மக்கள்….!!

கொட்டி தீர்த்த கனமழையினால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் குமலன் குட்டை, காளைமாடு சிலை- சென்னிமலை சாலை, ரயில்வே நுழைவு பாலம், கொல்லம்பாளையம் ரவுண்டானா உட்பட பல பகுதிகளில் மழைநீர் தேங்கி கழிவுநீர் சாக்கடையில் பெருக்கெடுத்து ஓடியதால் மக்கள் அவதி அடைந்தனர். அதன்பின் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், மது பாட்டில்கள் சாக்கடைகளில் சேர்ந்து அடைப்பு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இது வீட்டுக்குள்ள வந்தா எப்படி இருக்க முடியும்…. பொதுமக்கள் போராட்டம்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் பொதுமக்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் போடி நகராட்சியிலிருக்கும் 16 வது வார்டில் மழைப்பொழிவின் காரணமாக அப்பகுதியிலிருக்கும் கழிவுநீர் வீட்டிற்குள் புகுந்து. இதனால் பொதுமக்கள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டனர். இதற்கிடையே அந்தப் பகுதியிலிருக்கும் பொதுமக்கள் அனைவரும் கழிவுநீர் செல்லும் கால்வாய் பகுதியை சுத்தப்படுத்த வேண்டுமென்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஊருக்கு மத்தியில்… மலக்குழியில் வேலை… சட்டம் இயற்றிக் கூட… தொடரும் கொடுமை..!!

கையால் மலம் அள்ளுதல் தடை சட்டத்தை அரசு இயற்றி இருந்தாலும் அதை யாரும் பின்பற்றுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவையில் தூய்மைப் பணியாளர்கள் எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் வெறும் கையால் மனித கழிவுகளை அகற்றும் கொடுமை நடந்து வருகிறது. பொதுவெளியில் மக்கள் முன்னிலையில் பணியாற்றும் ஊழியர்களைக் கூட மாநகராட்சி எந்தவித பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்காமல் அலட்சியம் காட்டி வருகிறது. தமிழ்நாட்டில் 2013ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுவரை 174 பேர் மனிதக் கழிவுகளை அகற்றும் போது […]

Categories

Tech |