ஈரோடு பாலக்கரையில் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக கீதாராணி என்பவர் உள்ளார். இந்நிலையில் தலைமை ஆசிரியை மாணவர்களிடம் சாதிபாகுபாடு பார்த்து இருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அதாவது அப்பள்ளியில் 5ம் வகுப்பு பயிலும் தாழ்த்தப்பட்ட மாணவ- மாணவிகள் 6 பேரை கழிவறையை சுத்தம் செய்ய கூறியிருக்கிறார். இதனால் அவர்களும் வேறு வழியின்றி அதனை செய்திருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து வெளியில் சொல்ல முடியாமல் மாணவ-மாணவிகள் அஞ்சி தங்களுக்குள்ளேயே வைத்து இருக்கின்றனர். […]
