மனைவியின் வங்கி கணக்கில் 60000 ரூபாய் கள்ள நோட்டுகளை டெபாசிட் செய்த கணவர் மற்றும் அவரின் நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் சரவணன் – ரேவதி என்ற தம்பதிகள் வசித்து வருகிறார். இவரின் மனைவியான ரேவதி அப்பகுதியிலுள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார். அந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் பணம் சேமித்து வைப்பதற்காக எந்திரம் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நடப்பு மாதத்தில் எந்திரத்தில் சேமிப்பு தொகையை அதிகாரிகள் சரிபார்த்துள்ளனர். அப்போது […]
