அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், விழுப்புரத்தில் உள்ள கரும்பு விவசாயிகள் திருமண மண்டபத்தில் வைத்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் பேசியதாவது, ” திமுக அரசு, பயிர்கடன், நகைகடன் தள்ளுப்படி செய்யவில்லை, குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாயும் வழங்கவில்லை. தமிழகத்தில் தொழிற்சாலைகள் தொடங்க அதிமுக அரசு யாரையெல்லாம் நாடினோமோ அவர்களை தான் திமுக அரசு நாடி தொழில் தொடங்க வலியுறுத்துகின்றனர். […]
