கள்ளழகர் கோயில் சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதில் சிகர நிகழ்வாக மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்க வருகை தரும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்வு ஏப்ரல்16ஆம் தேதி அதிகாலை 5.50 மணிக்கு மேல் 6.20க்குள் நடைபெறவுள்ளது. வரும் 14ஆம் தேதி மாலை புறப்பாடாகி ஒவ்வொரு மண்டகப்படியில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ளார். கள்ளழகர் புறப்பாட்டின்போது 456 மண்டகப்படிகள் உள்ளன. 7-8 மண்டகப்படிகள் புதிதாக கேட்கப்பட்டுள்ளன. […]
