மதுரை மாவட்டத்தில் கள்ளழகர் கோவில் அமைந்துள்ளது. இங்கு விஜயதசமி நாளான நேற்று மாலை வேளையில் சிறப்பு விழா நடைபெற்றது. இதில் கள்ளழகர் பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்தார். இதனை அடுத்து மேளதாளம் முழங்க வர்ணக் கொடையுடன், தீவெட்டி பிடித்தபடி, பரிவாரங்களுடன் பெருமாள் புறப்பாடாகி ஆடி வீதியில் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் தெற்கு கொடை வாசல் வழியாக சென்ற கள்ளழகர் அம்பு விடும் மண்டபம் முன்பு எழுந்தருளினார். மேலும் […]
