அவிநாசியில் கள்ளநோட்டு புழக்கத்தில் இருப்பதாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசியில் இருக்கும் ராஜநகரில் வாரம்தோறும் புதன்கிழமை சந்தை கூடுகின்றது. இந்த பகுதியில் ஏராளமான வியாபாரிகள் காய்கறிகள், பழங்கள், ஜவுளி, மளிகை பொருட்கள், சிறுதானியங்கள், உணவு பொருட்கள் என ஏராளமானவற்றை விற்பனை செய்கின்றார்கள். இந்த நிலையில் சென்ற புதன்கிழமை சந்தையில் ஒரு பெண் வியாபாரம் செய்துவிட்டு இரவு வீட்டிற்கு திரும்பி உள்ளார். பின் வியாபார பணத்தை அவர் எண்ணிப் பார்த்தபோது […]
