ஆந்திராவில் கலால் துறையைச் சேர்ந்த காவலர்கள் கள்ளச்சாராய கும்பலால் சரமாரியாக தாக்கப்படும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்திலுள்ள ஆலமூர் பகுதியில் கள்ளச்சாராய கும்பலொன்று தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து இரண்டு நாட்களாக அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள் கோதாவரி ஆற்றுக்கு அருகே உள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அந்த வழியாக படகில் வந்த கள்ளச்சாராய கும்பல் போலீசாரை சரமாரியாக தாக்கியுள்ளது. […]
