கள்ளச்சாராயம் குடித்ததில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டத்தில் நாகபஞ்சமி திருவிழா கொண்டாடப்பட்டுள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கஞ்சாவை பயன்படுத்துவது வழக்கம். இந்நிலையில் சிலர் கஞ்சாவுடன் சேர்த்து அதிக போதைக்காக கள்ளச்சாராயமும் குடித்துள்ளனர். அப்போது திடீரென மயங்கி விழுந்த 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து 12 பேருக்கு கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். […]
