கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு பற்றி ஆட்சியர் தகவலை செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சு உள்ளிட்ட பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது. இத்தேர்வானது வருகின்ற 24ஆம் தேதி அன்று நடைபெற இருக்கின்றது. இதனால் இத்தேர்விற்கு தயாராகும் கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் விதமாக இலவச மாதிரி தேர்வுகள் நாளை மற்றும் வருகின்ற 17ஆம் தேதி […]
